மனிதநேயமே விழித்தெழு

மனிதனென்பவன் வெளிச்சம் தரும் தீபமாவதும், ஊரைக் கொளுத்தும் தீயாவதும் தீர்மானிக்கப்படுகிறது, அவனிடமுள்ள சூடர்மிகு பகுத்தறிவின் தன்மையாலே.....

போராட்டமென்பது வெளிச்சம் அளிக்கும் தீபமாவதும், ஊரை அழிக்கும் தீயாவதும் தீர்மானிக்கப்படுகிறது, போராட்டத்தின் பின்னணி, போராடும் வழிமுறை மற்றும் போராட்டத்தின் நோக்கத்தாலே.....

புரட்சியென்னும் தீ எதன் அடிப்படையில் பற்ற வைக்கப்படுகிறதோ, அதனைப் பொருத்தே அதன் பின்விளைவுகளும் அமையுமே....

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு பண்பாடு...
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு சட்டதிட்ட முறைகள்....
ஆராய்ந்துப் பார்க்கையிலே சட்டதிட்டங்களால் பயனேதுமில்லை,
தனிமனிதனின் மனச்சாட்சி விழிப்படையாதவரை....

போரில்லா உலகம்..
வன்முறைகளில்லா மனித சமுதாயம்..
என்பனவெல்லாம் எப்போது தான் உருவாகுமோ???..

பேராசையாலே,
பகட்டு வாழ்க்கை முறையில் வீழ்ந்து கிடக்கும் மனித சமுதாயமே..
எழந்திருக்கும் எண்ணமே உன்னில் ஏற்படவில்லையோ???...

மனிதநேயம் மறந்து, சிங்கமென்றும், புலியென்றும் பெருமையாய் கூறித் திரியும் மனிதர்களே.
என்று தான் நீங்களெல்லாம் மனிதர்களென்பதை உணர்வீர்களோ???...
அதுவரையில் ஓயாது எம் எழுத்துகளும், சிந்தனைகளும்..

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (6-Mar-17, 9:13 pm)
பார்வை : 4746

மேலே