மல்லிகை முள்

மண்ணில்
உயிர்களுக்கு
மதிப்பில்லை
பெற்ற சிசுவை
குப்பையிலே வீசி
மனசாட்சி இல்லாமல்
உண்டு உறங்கி வாழும்
ஈனப்பிறவி ஒருபுறம்...

ஒட்டிய வயிற்றுடன்
ஒருவாய் சோற்றுக்காக
கையேந்தும் ஜீவன்களுக்கு
அலட்சியமாக உதட்டை பிதுக்கி
கையைவிரிக்கும் வள்ளல்கள்
ஒருபுறம்...

ஆடம்பரமான கல்யாணம்
வித விதமான உணவு வகைகள்
வீனாக்கி குப்பையிலே வீசும்
வரட்டு வர்கம் ஒருபுறம்...

தேவைக்கு மேல்
பணத்தை பதுக்கி
அடுத்தவனின் அழுகுரலுக்கு
செவிசாய்க்காமல்
தான் உண்டு தன் குடும்பம்
உண்டென்று
சுயநலபோக்குடன் வாழும் பொதுநலவாதிகள் ஒருபுறம்...

பொதுநலம் பொதுநலம்
என வாய்கிழிய பேசி
மக்களின் மனதில் இலவச
மோகத்தை விதைத்து
தன் வாழ்க்கையை வளமாக்க
கபடநாடகமாடும்
வெள்ளைகள் ஒருபுறம்...

ஆன்மீகம் அருள்வாக்கு
என்ற பெயரில் மக்களுக்கு
ஆசைகாட்டி மோகவளைக்குள்
சிக்கவைத்து காமலிலைகள்
ஆடும் போலி காவிகள் ஒருபுறம்...

சிபாரிசு என்ற பெயரில்
தகுதியற்றவர்களை
உயர்ந்த பொறுப்பில் அமர்த்தி
ஊழலை ஊக்குவிக்கும்
உன்னதமானவர்கள் ஒருபுறம்...

என்று சமாதியாகும் இந்த
சந்ததி இடைவெளிகள்....

எழுதியவர் : செல்வமுத்து.M (7-Mar-17, 10:22 am)
Tanglish : mallikai mul
பார்வை : 96

மேலே