ஹைட்ரோ கார்பன்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் போராட்டம் நடைபெறுகிறது. சரி இப்போ போராட்டம் பண்ணி ஹைட்ரோ கார்பன் எடுப்பவர்களை தமிழ் நாட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டோம் என்று நினைத்து கொள்ளுங்கள். அவர்கள் எப்பிடியும் வேற மாநிலத்திற்கு சென்று ஹைட்ரோ கார்பனை எடுப்பார்கள். அந்த நேரத்தில் தமிழ் நாடு தப்பிவிட்டது என்று நம்மால் மகிழ்ச்சியடைய முடியாது.

நமது போராட்டம் என்பது உணர்வு பூர்வமான இருக்கிறது என்பதை தாண்டி கொஞ்சமாவது அறிவு பூர்வமாக இருக்க வேண்டும் என்பதை பதிவு செய்கிறேன். அதற்கு நமக்கு ஹைட்ரோ கார்பனை பற்றி தெரிய வேண்டும்.

ஹைட்ரோ கார்பன் என்றால் என்ன?

ஹைட்ரஜனும் கார்பனும் சேர்ந்தது தான் ஹைட்ரோ கார்பன். ஒரு கார்பனும் நாலு ஹைட்ரஜனும் இருந்த அதுக்கு பேர் மீத்தேன். இப்படி ஈத்தேன், ப்ரொபென் என்று பல இருக்கிறது.

எதற்கு ஹைட்ரோ கார்பனை எடுக்கிறார்கள்? அதை எடுத்து என்ன செய்வார்கள்?

மீத்தேனிலிருந்து அதிகப்படியான எரிவாய்வு கிடைக்கும் அதை வைத்து மின்சாரம் தயாரிக்க முடியும்.

இதற்காக தான் நம் அரசு மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் என்று வேறு வேறு பெயர்களில் எடுக்க முயற்சி செய்கிறார்கள். அவர்களுடைய முக்கிய எண்ணமே இந்த மீத்தேனை எடுப்பது தான்.

நெடுவாசலில் 2700 மீட்டர் ஆழத்தில் இதை எடுக்க போகிறார்கள். இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படாது என்று கூறுகிறார்கள். இதில் உண்மை இருக்கிறதா என்று தெரியவில்லை.

மீத்தேன் பூமிக்கு அடியில் மட்டும் தான் கிடைக்குமா? கண்டிப்பாக இல்லை.

ஒரு வருடத்திற்கு சுமார் 14 மில்லியன் டன் மீத்தேன் வாய்வு பூமியின் மேல் பரப்பிலிருந்து காற்றுடன் கலக்கிறது. இந்த மீத்தேன் குப்பையிலிருந்து வெளியே வருகிறது.

நாம் கொட்டும் குப்பையை பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரிக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்யாமல் அப்படியே போட்டு விடுகிறார்கள்.

ஒரு டன் குப்பையிலிருந்து நம்மால் 40 கிலோ மீத்தேன் எடுக்க முடியும். இந்தியாவில் மட்டும் ஒரு நாளைக்கு 1 லட்சம் டன் குப்பை சேர்கிறது இதிலிருந்து 40 லட்சம் கிலோ மீத்தேன் எடுக்கலாம். இப்படியே ஒரு வருடத்திற்கு கணக்கு போட்டால் இது பூமிக்கு அடியில் இருப்பதை விட அதிகம்.

இதில் மீதமுள்ள குப்பையை வைத்து நம்மால் இயற்கை உரங்களை உருவாக்க முடியும்.

இதை தவிர்த்து மீத்தேன் வேறு எங்காவது கிடைக்குமா? கிடைக்கும்.

உயிரினங்களின் கழிவுகலிருந்து கிடைக்கும். மாட்டின் சாணத்தில் இருந்து பல பேர் மீத்தேனை எடுத்திருக்கிறார்கள். இவை துற்நாற்றமும் அடிக்காது. இது மிகவும் எளிய முறை. இது பயோ காஸ் என்று அழைக்கப்படுகிறது. இதை நம் விட்டிலையே பயன்ப்படுத்தலாம்.

இப்படி ஹைட்ரோ கார்பனை எடுக்க இத்தனை வழிகள் இருந்தும் ஏன் விவசாயி வயிற்றில் அடிக்கிறார்கள் என்று புரியவில்லை.

ஹைட்ரோ கார்பன் திட்டம் வேண்டும் ஆனால் அது விவசாய நிலங்களில் வேண்டாம்.

எழுதியவர் : சரவணன் (7-Mar-17, 10:38 am)
சேர்த்தது : சரவணன்
பார்வை : 965

சிறந்த கட்டுரைகள்

மேலே