அமைறா

அமைறா, அமைறா...
@@@@@
பாட்டிம்மா..
@@@@@
வாடி அல்லி. நல்லா இருக்கறயா?
@@@
நல்லா இருக்கேன் பாட்டிம்மா. அது

சரி, நான் வர்றபோது எதுக்கு

அமைறா, அமைறா-ன்னு திரும்பத்

திரும்ப சொல்லீட்டு இந்திருந்தீங்க.

தெலுங்கெல்லாம் எப்பக்

கத்துட்டீங்க? அமை, அமைத்தல்

எல்லாம் தமிழ்ச் சொற்கள். ஆனா

'றா' ங்கறது 'வா' ங்கற தமிழ்ச்

சொல்தான் 'றா' ன்னு தெலுங்கு

மொழில மாத்திட்டாங்க. யாரை எதை

அமைச்சுட்டு "வா'-ன்னு

கூப்பிட்டடீங்க.
@@@@
அடிப் போடி கூரு கெட்ட அல்லி.

பீக்கார்ல (பீகார்) இருந்து எங் கடசி

மவன் மாரிமுத்து குடும்பத்தோட

வந்திருக்கறான். அவம் பொண்ணுப்

பேருதான் அமைறா. அவளத்தான்

நாங் கூப்புட்டேன்.
@@@@
பாட்டிம்மா, நானும் அந்தப் பேரக்

கேள்விப்பட்டிருக்கேன். அது இந்தி

நடிககை ஒருவரோட பேரு.

இப்பெல்லாம் நம்ம தமிழ் நாடு,

புதுச்சேரில இருக்கற

தமிழர்கள்லகூட 98% பேர் தங்களோட

பிள்ளைங்களுக்கு இந்திப் பேர

வைக்கறதுதான் நாகரிகம்னு

நெனைக்கறாங்க. எல்லாம் சினிமா

ரசனை பாட்டிம்மா, சினிமா ரசனை.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

Amaira = enchanting (Adjective) பெயரடைச் சொல். தமிழர்கள் பிள்ளைகளுக்குச் சூட்டும் பெரும்பாலான பெயர்கள் பெயரடைகள்; பெயர்ச் சொற்கள் அல்ல.
Swetha = Pure
Priya = loved one, darling, beloved
Savitha = bright
Sundar = beautiful
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
indiachildnamescom.

எழுதியவர் : மலர் (7-Mar-17, 1:22 pm)
பார்வை : 231

மேலே