பெண்

பெண் - ஆயுத எழுத்து

பெண் உண்மையானவள் .....
இறைவனின் படைப்பில் பரிபூரணமானவள் பெண் .....

சொன்ன சொல்லை காப்பாற்றுபவள் .....
நீதி தவறாதவள்.....
தன் கற்பை உயிராக எண்ணுபவள்.....
எதற்கும் மயங்காதவள் .....

மனதில் கணவனை மட்டுமே சுமப்பவள் ......
பிள்ளைக்காக உயிர் வாழ்பவள் ......
உயிர் தந்த தாய் தந்தையை எப்பொழும் மறவாதவள் .....
அண்ணனுக்காக தன் உயிரை துச்சமாக தந்து விடுவாள் ......

பெண்ணுக்கு தன் உயிரை விட பெரியது ....
தன் மானமும் ....
தன் உயிரான கணவன் ....
தன் உயிர் கொடுத்த பிள்ளைகள்.....
தனக்கு உயிர் கொடுத்த தாய் ...தந்தை ....
தன் உடன்பிறந்த சகோதரன் ....சகோதரி ......
தன் தோழிகள் ......

எந்நிலையிலும் தன்னிலை மாறாமல் இருப்பவளே பெண் ......

தமிழை போன்ற தூயவள் பெண் .....
வீரம் விவேகம் ஆக்கம் எல்லாமே பெண்மை .....

பெண்மை என்பது பெண்ணின் அடையாளம் ......

பெண் என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன் .....

இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் ......

ஆண்களே பெண்மை என்பது
ஆணுக்கு ஆண்மை
எப்படியோ
அப்படியே பெண்ணுக்கு பெண்மை .....
பெண்மை அடையாளமே தவிர ஆடம்பரம் அல்ல....
அத்தியாவசியமே தவிர அனாவசியம் அல்ல.....

பெண்மையை பொய்யாக புகழாதீர்
உண்மையாக மதியுங்கள் ......

எங்களை போற்ற சொல்லவில்லை
அடையாளத்தை அழிக்காதீர் என்கிறோம் .....
எங்கள் பாதையை நாங்கள் சமைப்போம் ....
துணையாக நிற்பதும் நிற்காததும் உங்கள் விருப்பம் ....
ஆனால் அதை அழிப்பதை பார்த்து கொண்டிருக்க மாட்டோம் .....


ஒரு ஆணிற்கு ஆண் என்ற தகுதி
அவன் நடத்தையில் இருக்கிறது ....
ஆனால் ஒரு பெண்ணிற்கு
பெண்மை அவளின் குணத்திலேயே கலந்திருக்கிறது ......

பெண்மையை பாதுகாப்போம் .....
பெண்ணை சக மனிதினியாக மதிப்போம் .....
பம்மாத்து புகழ்ச்சி வேண்டவே வேண்டாம் .......

ஆணை போல் தான் பெண்ணும்
என்பதை உணருங்கள் ....
பெண் என்பவள் ஒரு உயிர் ....
வெறும் இச்சை கொள்ளும் உடல் அல்ல .....

எந்த பெண்ணும் ஒரு ஆணை
இந்த பார்வையில் பார்ப்பதே இல்லை ....
ஆனால் ஆண்களோ
பிறந்த குழந்தை முதல் இறக்க போகும் பாட்டி வரை விட்டு வைப்பதில்லை .....

ஆண்களே
பெண்கள் மதிக்கும் ஒரு வாழ்க்கையை வாழுங்கள் .....
பெண்கள் எல்லோரும் உண்மையாக வாழ்கிறார்கள் உலகில் ஆண்மைக்கு பங்கம் இல்லாமல் ......
பெண்கள் தெய்வம் அல்ல மனிதினிகள் ....
பெண்கள் வெறும் தசை அல்ல புனிதம் .....
பெண்கள் பெண்மையின் அடையாளம் .....
பெண்ணியம் என்பது திமிர் அல்ல ....
ஆண்களின் ஆண்மை போன்றதே

~ பெண்

பெண் என்று சொல் பெருமையோடு .....
நான் ஒரு பெண் .....

எழுதியவர் : பெண் பிரபாவதி வீரமுத்து (8-Mar-17, 11:36 am)
Tanglish : pen
பார்வை : 3056

மேலே