மகிழ்ந்திரு மகிழ்ந்துரு
புதிதாய் புத்தம் வாங்கி பக்கங்களை புரட்டுதல் ஒரு மகிழ்வு
புதிதாய் பேனா வாங்கி பெயர் எழுதுதல் ஒரு மகிழ்வு
புதிதாய் உடை வாங்கி அணிவித்தல் ஒரு மகிழ்வு
புதிதாய் முதல் கிறுக்கல் கவிதை எழுதுதலில் ஒரு மகிழ்வு
மழலை நமை பார்த்து புன்னகைத்தல் ஒரு மகிழ்வு
மனதில் தோன்றும் முதல் காதல் ஒரு மகிழ்வு
மழைத்துளியின் மண் வாசம் ஒரு மகிழ்வு
மாதாந்திர முதல் சம்பளம் ஒரு மகிழ்வு
அதிகாலை தூக்கம் ஒரு மகிழ்வு
அம்மாவின் பாசம் எப்போதும் மிக மகிழ்வு
அழகனான பெண் நம்மை பார்த்து நாணுதல் ஒரு மகிழ்வு
ஆசானின் பொறுப்பு மிக்க கண்டிப்பு ஒரு மகிழ்வு
இளையராஜாவின் இசையில் ஒரு மகிழ்வு
இலையிட்ட சோறு உண்ணுதல் ஒரு மகிழ்வு
இன்னல் தாங்கி இன்முகம் காட்டுதல் ஒரு மகிழ்வு
எல்லாம் மகிழ்வு ...எதிலும் மகிழ்வு ..மனம் மகிழ்ந்து ..நீயும் மகிழ் மற்றவரையம் மகிழ்வி
வாழ்க்கை மகிழ்வாகும்