நடித்தாலும் காதல்
நான் சிரிப்பது போலே சிரித்தேன்
நீயும் சிரித்துக் கொண்டே ரசித்தாய்!
நான் அழுவது போலே அழுதேன்
நீயோ பார்த்து பார்த்து ரசித்தாய்!
நான் கவிஞன் போல நடித்தேன்
நீயோ விழுந்து விழுந்து சிரித்தாய்!
நான் பறப்பது போலே நடித்தேன்
நீயோ புரண்டு புரண்டு சிரித்தாய்!
நான் இறப்பது போலே நடித்தேன்
ஆனால் நீயோ..?
நான் இறப்பது போலே நடித்தேன்
நீயோ எனருகில் இறந்ததுபோலே கிடந்தாய்!