மகளிர் தினம் - 080317

மகளிர் தினம் - 08.03.17

பெண் என்றால் சக்தி
சக்தி என்றால் சகலம்

சகலமும் சங்கமிப்பது
ஓரிடம்
அதுவே பெண்மை என்று
பெயர் பெறும்

பெண்

பல வடிவங்களில்...

ஒவ்வொரு பருவத்திலும்
நம் வாழ்வை அழகு
படுத்திக்கொண்டு

பெண்

இருக்கும் இடத்தை
மங்களகரமாக ஆக்குபவள்

ஒரு தெய்வீகத் தன்மை
தாண்டவமாடும்

பெண்

அறிவிற்கும்,
பணத்திற்கும்
இருப்பிடம் அவளே

எத்தனை பேர்
இதனை அறிவீர்

பெண்

ஆழமாக சிந்தித்து
தீர்க்கமான முடிவை
எடுப்பவள்

உலக இயக்கத்திற்கு
சொந்தக்காரி

பெண்

தோழமைக்கு சிறந்த
உதாரணம்

அங்கு இருபாலாருக்கும்
இடையே இருக்கும்

கண்ணியம்

தெய்வாம்சம் வாய்ந்தது

பெண்

நம் பிறப்பின் மூலகர்த்தா

குடும்பத்தின் ஆணிவேர்

பெண்

இளகிய மனம் கொண்டவள்

மனதுடன் பேசி, இறுதியில்
அறிவோடு கை குலுக்குபவள்

பெண்

மென்மையானவளாக
இருந்தாலும்

உறுதியான நெஞ்சம்
கொண்டவள்

பெண்

தெய்வத்திற்கு
நிகர் அவளே

ஆகையால்

பெண்களை,

மதிப்போம்
வணங்குவோம்
பாராட்டுவோம்
உரிமை கொடுப்போம்
பக்க பலமாய் இருப்போம்
இறுதிவரை போற்றுவோம்

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (9-Mar-17, 8:53 pm)
பார்வை : 30

மேலே