வியாபாரம்
நீங்கள் எங்கள் பொருட்களை வாங்கினால் எத்தியோப்பியாவில் உள்ள ஒரு குழந்தைக்கு உணவு கிடைக்குமென ஒரு விளம்பரம் செய்கிறார்கள்
மனிதனின் மனிதநேயத்தை கூட பணமாக்க கார்பரேட் நிறுவனங்கள் ஆரம்பித்துவிட்டது!
ஆம் இந்தியா ஏழை நாடுதான்
ஆனால் இங்கே மார்கெட் பெரிசு!
உலக அழகியாக ஐஸ்வர்யா தேர்தெடுக்கமால் இருந்தவரையில் தமிழ் பெண்களுக்கு பேர்'ஆன் லவ்லி என்ற முகப்பூச்சி கீரிம் இருக்கிறதா என்று கூட தெரியாது ஆனால் அந்த கீரிம் போடதா பெண்களே இல்லை
இதற்க்கு பின்னால் இருப்பது ஒரு வியாபார நூண்ணரசியல்
வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்ட பல பொருட்கள் இந்தியாவில் தாராளமாக கிடைக்கிறது
இந்தியாவின் குப்பை தொட்டி தமிழகம்
உலகின் குப்பை தொட்டி இந்தியா
சாதியில் ஏற்றதாழ்வு பார்த்தோம் இன்று இவர்களால் நிறத்தால் ஏற்றதாழ்வு பார்க்க ஆரம்பித்திருக்கிறோம்
என் தங்கை கறுப்பு என்பதால் நான் புறம்தள்ள முடியுமா!
விளம்பரம் செய்யப்படாத பொருட்கள் தரம் குறைந்தகாவும்
விளம்பரம் செய்யப்படும் பொருட்கள் தரம் இல்லாதவைகாளவும் நம்பவைத்துவிடுகிறது இந்த விளம்பரம்
ஒரு குழந்தை சராசரியாக ஒரு நாளைக்கு நூறு விளம்பரங்கள் பார்ப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது
நீங்கள் நேரடி அரசியலில் இல்லை
ஆனால் உங்களை சுற்றி அரசியல் இருக்கிறது ஒரு நூண்ணரசியல்!