வியாபார உலகின் முடிவு

அனைத்திற்கும் ஒரு விலைமதிப்புள்ளது மனிதர்கள் படைத்த வியாபார உலகில்....

பொருட்களுக்கு மட்டுமல்லாமல் உணர்வுகளுக்கும், உயிர்களுக்கும் விலைமதிப்புள்ளது
மனிதர்கள் படைத்த வியாபார உலகில்.....

திறமை வெளிப்பட பணம் வேண்டும் மனிதர்கள் படைத்த படைத்த வியாபார உலகில்.....

கல்லூரிகளும், பள்ளிகளும் மிகப் பெரிய வியாபார நிறுவனங்களாகி விட்டன, மனிதர்கள் படைத்த வியாபார உலகில்.....

தூய்மையான குடிதண்ணீருக்கும் ஒரு விலையுண்டு மனிதர்கள் படைத்த வியாபார உலகில்.....

சுவாசிக்கும் தூய காற்றிற்கும் ஒரு விலையுண்டு மனிதர்கள் படைத்த வியாபார உலகில்.....

சோம்பேறிகளெல்லாம் புத்திசாலிகளாகி விட்டார்கள் மனிதர்கள் படைத்த வியாபார உலகில்......

இயற்கையை விட்டு அறவே விலகிச் செல்கிறோம், மனிதர்கள் படைத்த வியாபார உலகில்......

எது நிரந்தரமென சிந்திக்கையில் கடைசியில் பணம் கூட மிஞ்சுவதில்லையே....
ஒரு பிடி சாம்பலாகப் போகும் மனிதர்கள் தங்களுடைய உடலுக்காக உருவாக்கினார்கள், இந்த வியாபார உலகை......
ஆனால்,
உடல்நலமென்பதை பணத்தால் வாங்கிவிட்டார்களா? என்றால் இல்லையே....
முதல்வர் ஜெ.யின் மரணத்தைத் தடுக்க முடிந்ததா அவரிடம் இருந்தக் கொள்ளைப் பணத்தால்??......

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (11-Mar-17, 12:21 am)
பார்வை : 813

மேலே