சாயக்கனவுகள்
சாயக்கனவுகள்...
ஐனநாயக பதிவேட்டில்
அரசாங்கம் மொத்தத்தை காண்பிக்க கீழாக
இரு கோடுகள் ..
வறுமை மாந்தர்கள்!
நீண்ட வரிசையில்
இரவில் மட்டும்
கண்டுகொள்ளபடாத
அனுமதி . . .
சாலையோரத்தில் சகதியோடு !
என்ன என்னமோ
தடை சொன்னாலும் ..
ஏணிப்படியேறி
எட்டிப்பார்க்கத்தான்
சொல்கிறது ..
அவர்களின் வாழ்க்கையை!
பணக்காரர்கள்
சாலையில் பயணித்து ..
ரசித்து மெதுவாக நகர்கிறது
அவர்களின் கனவுகள் ...
பாதசாரியாக!
வானவில் விளக்குகளில்
விதம் விதமான
உயர் ரக மகிழுந்து சத்தங்கள் ..
அவர்களின்
வண்ணக்கனவுகள் வசதியாக
ஆசைத்தீர வாழ்கிறது!
வானவில்லின்
வெளிச்சத்தில்
மழை வந்து சேர்ந்து கொண்டது. . .
வண்ணக்கனவுகள்
கரைந்தது சாயங்களாக . . .
சாலையோர நடைபாதையில்!
சாயக்கனவுகள்
கலைந்தது. . .
விடியாமலேயே
விழித்துக்கொண்டார்கள். . .
இது தான்
அவர்களின் அன்றாடமோ???
வருத்தத்தில் மாடுகள்
நகர்த்து படுக்கின்றது!
✍🏼மருதுபாண்டியன்.க