மகிழ்வு
மானுட வாழ்க்கையில் மகிழ்வு கொண்டால்
வாழ்க்கையில் குறை ஏது மானுட ..
நீயும் சந்தோஷம் கொள்
உனக்கு வாழ்வில் தோல்வி ஏது?
வாழ்க்கையில் எத்தனை இடையூறு இருந்தாலும்
நீ சந்தோஷ ஒளி உண்டாக்கு -மானுட
உன் வாழ்வில் உள்ள குறைகளும் நீங்கி
உன் வாழ்வில் சாந்தி உருவாகி
நிம்மதியையும் நிலையாக உருவாக்கிடும்
மனித வாழ்க்கையின் உயிர் நாடி சந்தோஷம்
வாடிய பயிருக்கு நீர் கிடைத்ததை போல
மனுடனின் வாழ்வில் சந்தோசம் வந்தால்
தோல்விக்கு இடம் இல்லை -மானுட
நீ மகிழ்வு கொள்
வாழ்வில் வெற்றி வேணுமா -மானுட
சந்தோச மருந்தை தினமும் அருந்து
உன் வாழ்கையிலும் தோல்வியும் நெருங்காது
வாழ்வும் உயந்திடும்