2030இன் முக்கிய செய்திகள்

2030 இன் முக்கிய செய்திகள்

வணக்கம்

இன்றைய செய்திகள்

*கணவன் சரியாக காபி போடாததால் மனைவி கோபம் அடைந்து கணவனை உயிரோடு எரித்துவிட்டால்.

*ஐந்து கல்லூரி மாணவிகள் ராக்கிங்(Ragging) செய்ததால் ஒரு மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டான்.

*கடந்த 2016 ஆம் ஆண்டு இறந்த ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

*தூய்மை இந்தியா திட்டம் 2035 குள் நிறைவேற்றப்படும் என மோடி உறுதி.

*மோடி இரண்டு மாத சுற்றுப்பயனமாக லண்டன், இத்தாலி, ஸ்வீடன், அரேபியா ஆகிய இடங்களுக்கு செல்கிறார்.

*தமிழ் நாட்டில் பூரண மதுவிலக்கு கூடிய விரைவில் அமலுக்கு வரும் என முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

*விஷாரூபம் 2 இந்த வருடம் கண்டிப்பாக திரைக்கு வந்து விடும் என கமல் உறுதி.

*தனுஷ் எங்களின் மகன் என்று தொடரப்பட்ட வழக்கில் மறுபடியும் நாளை தனுஷை நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

*எனை நோக்கி பாயும் தோட்ட படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.

*தமிழ் ராக்கர்ஸ்சை அடியோடு அழிப்பேன் என்று விஷால் கடந்த 13 வருடங்களாக கூறிவருகிறார் இதனால் தமிழ் ராக்கர்ஸ் விஷால் படங்களை மட்டும் நேரடி ஒளிபரப்பு செய்துக்கொண்டு இருக்கிறது.

இத்துடன் இந்த செய்திகள் நிறைவடைந்தன.
நன்றி
வணக்கம்.


Close (X)

4 (4)
  

சிறந்த நகைச்சுவைகள்

மேலே