அவளும் நானும்

அவளும் நானும்

அவளை பார்பதற்காகவே தினமும் என் நண்பனின் வீட்டிற்கு செல்வேன். என் நண்பனின் வீட்டின் அருகில் தான் அவள் வீடும் இருக்கிறது. அன்று ஒரு நாள் வழக்கம் போலவே அவளை பார்க்க நண்பனின் வீட்டிற்கு சென்றேன். அவன் வீட்டின் வெளியில் நின்றுக்கொண்டு அவளின் வருகைக்காக காத்துக்கொண்டு இருந்தேன்.

இன்று என் காதலை அவளிடம் சொல்லி விடலாம் என்று முடிவு செய்தேன். அவள் வந்தால். அவளை பார்த்ததும் என்னுள் தடுமாற்றம் ஏற்பட்டது. தான் காதலிக்கும் பெண்ணிடம் போய் காதலை சொல்வது எளிதான விஷயம் அல்ல அது காதலிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.

என்னுள் தைரியத்தை வர வைத்து கொஞ்சம் தயங்கி தயங்கி அவளிடம் சென்று பேச தொடங்கினேன். "என் பெயர் கார்த்திக். நான் உன்னை காதலிக்கிறேன்" என்று அவளிடம் கூறினேன். அதற்கு அவள் "நான் உங்களை பல நாட்களாக பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். இல்லை வேண்டாம் என் பெற்றோர்கள் இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார்கள்" என்று கூறினால்.

அதற்கு நான் "உன் பெற்றோர்கள் விருப்பத்தை விடு நீ என்ன சொல்லிகிறாய்" என்று அவளிடம் கேட்டேன். "எனக்கு உங்களை பிடிக்கும். ஆனால் என் பெற்றோர்கள் இதற்கு சம்மதிக்க மாட்டார்கள்" என்று பயத்துடன் கூறினால்.

கண்டிப்பாக என் பெற்றோர்களும் இதற்கு சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என்று மனதினுள் நினைத்துக்கொண்டு. அவளுக்கு தைரியத்தை குடுக்கும் வகையில் "அதற்கெல்லாம் நீ பயப்படாதே உன் விருப்பத்தை மட்டும் நீ கூறு" என்று கூறினேன். அதற்கு அவள் சிரித்துக்கொண்டே என் காதலுக்கு சம்மதம் தெரிவித்தால்.

அதன் பிறகு எங்கள் காதல் வலிமையானது. நாங்கள் பல இடங்களுக்கு ஒன்றாக சேர்ந்து சென்று ஊர் சுற்றினோம். ஒரு நாள் அவள் என்னிடம் ஒரு கேள்வி கேட்டால் "கார்த்திக்!!! நம் காதலை நம் பெற்றோர்கள் ஏற்கவில்லை என்றால் என்ன செய்வது" என்று கேட்டால். இதற்கு என்னிடம் பதில் இல்லாததால் அவளிடம் எதுவும் கூறவில்லை. இருந்தாலும் என்னுள் ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது. எங்கள் பெற்றோர்கள் எங்கள் காதலை ஏற்கவில்லை என்றால் என்ன செய்வதென்று.

அதனால் எங்கள் காதலை பற்றி எங்கள் பெற்றோர்களிடம் கூற முடிவு செய்தோம். நான் முதலில் என் வீட்டில் கூறினேன் அவர்கள் என் காதலியின் பெயரை கேட்டார்கள். எனக்கு அவளின் பெயரை சொல்லவதற்கே மிகவும் பயமாக இருந்தது. இருந்தாலும் என் பெற்றோர்களிடம் அவள் பெயர் ஆயிஷா என்று கூறினேன். ஆம் அவள் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவள். நானோ இந்து மதத்தை சேர்ந்தவன்.

அதை கேட்டதும் என் பெற்றோர்கள் என் மீது கோபமடைந்தார்கள். என் பெற்றோர்களை ஒரு வழியாக இதற்கு சம்மதிக்க வைத்தேன். ஆனால் அதற்கு அவர்கள் ஒரு நிபந்தனையை கூறினார்கள். ஆயிஷா இந்து மதத்துக்கு மாறினால் இதற்கு எங்களுக்கு சம்மதம் என்று கூறினார்கள்.

ஆயிஷாவும் அவள் வீட்டில் எங்கள் காதலை பற்றி கூறியிருக்கிறாள். அதற்கு அவர்கள் கார்த்திக் இஸ்லாமிய மதத்துக்கு மாறினால் இதற்கு எங்களுக்கு சம்மதம் என்று கூறியுள்ளார்கள்.

எங்களுக்கு என்ன செய்வதென்றே ஒன்றும் தெரியவில்லை. இதற்கு அவர்கள் சம்மதம் தெரிவிக்காமலே இருந்திருக்கலாம் என்று தோன்றியது.

வேறு மதத்தை சேர்ந்தவர்களை காதலிப்பது தவறா? மதங்களை காரணம் காட்டி காதலை பிரிப்பது சரியா? அவளும் நானும் காதல் காதல் செய்தது தவறா?


  • எழுதியவர் : சரவணன்
  • நாள் : 13-Mar-17, 10:12 pm
  • சேர்த்தது : சரவணன்
  • பார்வை : 988
  • Tanglish : kaathalum mathamum
Close (X)

0 (0)
  

மேலே