என் காதலியின் பெயர்

என் காதலியின் பெயர்

நான் என் வீட்டில் இருக்கும் பூஜை அறைக்கு சென்று "இன்று என் காதலியை நான் பார்க்க வேண்டும்" என்று விநாயகரிடம் வேண்டிக்கொண்டு இருந்தேன். ஏன் விநாயகரிடம் வேண்டுகிறாய் என்று நீங்கள் யோசிக்கலாம் ஏனென்றால் விநாயகர் தான் அணைத்து கோவில்களிலும் துணை இல்லாமல் தனியாக இருக்கிறார் அவர்க்கு தான் தனியாக இருப்பரின் கஷ்டம் புரியும் அதனால் தான் அவரிடம் வேண்டிக்கொண்டேன்.

கல்லூரிக்கு கிளம்ப பேருந்தில் ஏறினேன். நான் என் காதலியை பார்ப்பது பேருந்தில் மட்டும் தான். அதனால் தினமும் அவள் ஏறும் பேருந்திலையே தான் நானும் ஏறுவேன். அவள் என் கல்லூரி இல்லை வேறு ஒரு கல்லூரியில் படிக்கிறாள்.

பேருந்தில் சென்றுக்கொண்டு இருந்தேன். அவள் ஏறும் பேருந்து நிறுத்தம் வந்தது. அவளும் ஏறினாள். நான் இருக்கையில் அமர்ந்துக்கொண்டு இருந்தேன். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் என்னால் அவளின் முகத்தை சரியாக பார்க்க முடியவில்லை. அதனால் எழுந்து நின்றுக்கொண்டேன். அவளை பார்த்தேன் பார்த்துக்கொண்டே இருந்தேன் வேறு எதுவும் செய்யவில்லை. கடந்த ஒரு வருடமாக அவளை பார்த்துக்கொண்டே தான் இருக்கிறேன். அவளின் பெயர் கூட எனக்கு தெரியாது. பெயர் கூட தெரியாமல் அவளை நான் காதலித்து கொண்டு இருக்கிறேன்.

அவளின் கல்லூரி வந்துவிட்டது அதனால் அவள் பேருந்தில் இருந்து இறங்கினால். இறங்கும் போது அவளின் அழகான கண்களால் என்னை பார்த்தால். அந்த பார்வைக்காக பல கோடி கொடுத்தாலும் ஈடாகாது.

இத்துடன் அவளை கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது தான் பார்க்க முடியும். நான் வகுப்பில் இருக்கும் போதுலாம் அவளை பற்றி தான் யோசித்துக்கொண்டு இருப்பேன். கல்லூரி முடிந்து வீட்டிற்கு பேருந்தில் சென்றுக்கொண்டு இருந்தேன். அவளும் பேருந்தில் இருந்தால். எனக்கு முன்னால் இருக்கும் இருக்கையில் அமர்த்துக்கொண்டு அவள் தோழியிடம் பேசிக்கொண்டு இருந்தால்.

இவ்வளவு அருகில் என் காதலி இருந்தும் அவளிடம் நான் பேசவில்லை. அவளிடம் பேசிவிடலாம் என்று பல முறை நினைத்திருக்கிறேன். ஆனால் அது சுலபம் இல்லை என்பதையும் புரிந்துக்கொண்டேன். பேருந்தில் நான் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தேன். அவளின் பேச்சையும் அழகையும் ரசித்துக்கொண்டே இருந்தேன். அவளின் வீடு வந்துவிட்டதால் இறங்கிவிட்டால். இறங்கும் போது என்னை பார்கிறாளா என்று நான் ஆவலோடு அவள் கண்களை பார்த்துக்கொண்டு இருந்தேன். ஆனால் பார்க்கவில்லை.

இன்று வெள்ளி கிழமை. சனி, ஞாயிறு கல்லூரி விடுமுறை என்பதால் அவளை பார்க்க முடியாது. நான் அவளை விடுமுறை நாட்களில் தான் அதிகமாக காதலிக்கிறேன்.

எப்படியோ சனி கிழமை முடிந்து விட்டது. ஞாயிறு மாலை நண்பர்களுடன் வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வந்தேன். வீட்டினுள் நுழைந்ததும் எனக்கு அதிர்ச்சி அங்கு என் காதலியும் அவளுடன் ஒரு பெண்ணும் அமர்த்துக்கொண்டு இருந்தார்கள் அது அவளின் அம்மா என்று நினைக்கிறேன். என் அம்மா அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார்கள். ஒன்றுமே புரியாமல் நான் வீட்டினுள் சென்றேன்.

என் அம்மா அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். இவள் என் பள்ளி தோழி என்று அந்த பெண்ணை அறிமுகம் செய்தார்கள். இது அவளின் மகள் ஸ்வேதா என்றும் என் காதலியை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். இது நாள் வரையில் அவள் பெயர் ஸ்வேதா என்பது எனக்கு தெரியாது.

அதன் பிறகு நானும் ஸ்வேதாவும் நன்றாக பழக ஆரம்பித்தோம். அவளிடம் என் காதலை கூறினேன் அவளும் ஏற்றுக்கொண்டால். என் அம்மாவும் அவளின் அம்மாவும் தோழி என்பதால் எங்கள் காதலுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.


Close (X)

4 (4)
  

மேலே