குளிர்கால விடியல்

தொலைந்த பாட்டி
கடைக் கடையாய் சுற்றுகிறது
காக்கை

வசதியான மருத்துவமனை
இதுவரை கண்டதே இல்லை
சுகப்பிரசவம்

அம்மாவின் புற்றுநோய்க்கட்டி
இறுதியாய் உடைந்து போனது
மகளின் உண்டியல்

மூடியிருந்த புத்தகம்
காலம் முழுவதும் பிரசவவலியோடு
சிறுமியின் மயிலிறகு

உடல் மெலிந்த மாடு
சுற்றிக் கொண்டிருக்கின்றது
பிணம்தின்னிக் கழுகு

நடுங்கும் குளிர்
இறுகப் பிடித்திருக்கிறது
மரத்தில் கறையான்

கோடைக்காலம்
மேலேறி வருகிறது
கிணற்றுத் தவளை

வரவில்லை காற்று
திறந்தே இருக்கிறது
மர ஜன்னல்

வெட்டிய மரம்
ஆடிக் கொண்டிருக்கிறது
ஊஞ்சல்

மாடியில் காக்கை
கரைந்து வரவழைக்கிறது
அமாவாசை

குளிர்கால விடியல்
புல்நுனியில் தாகம் தீர்க்கிறது
சூரியன்

- கி.கவியரசன்

எழுதியவர் : கி. கவியரசன் (14-Mar-17, 11:59 am)
சேர்த்தது : கி கவியரசன்
பார்வை : 282

சிறந்த கவிதைகள்

மேலே