இயற்கையின் ஓவியம்

பிறை நிலவு ஏர் பூட்டி
பின்னே தங்க சரிகை நெய்து
வானவில் கரைத்து வண்ணம் பூசி
வார்தெடுக்க வானம் செதுக்கி
வங்கக்கடல் நீர் சேர்த்து
செந்தூர பூ அரைத்து
சவ்வாது தூள் சேர்த்து
தேன்மழை செதுக்க
மயில் ஒன்று மலர்ந்து வர
மணம் வைத்துக் கண்டு கொண்டேன்
இவள் பல்லவ நாட்டு சிற்பம் என்று
பிரம்மன் தான் சிற்பி என்று
.

எழுதியவர் : மாதவன்.ஐ (14-Mar-17, 8:58 pm)
சேர்த்தது : Madhavan I
Tanglish : iyarkaiyin oviyam
பார்வை : 103

மேலே