இஞ்சிமுறப்பா காதல்
இஞ்சிமுறப்பா காதல்
=====================
நான் பார்த்து பழகிய
உன் முதல் பார்வை
இன்றும் நாக்கில்
நினைத்தாலே தித்திக்கும்
இஞ்சிமுறப்பா காதல்
சட்டென்று வந்து
பட்டென்று இனிக்கிறது
நாக்கடியில் படிந்த
தேன் கலந்த இதழ்
அதிகாலையில் தொடர்கிறது
சுக்கு கலந்த இதயக் காதல்
சுக்கு நூறாய் போனாலும்
வீரியம் குறையாது
உள்ளத்தில் நிலைக்கும்
உயர்வான மோதல்
இனிப்போடு கலந்த காரமாய்
ஒரு நிமிடம் ஜன்னல் ஓரம்
கண்ணில் கலந்து
நினைவில் மலர்ந்த
என் இஞ்சிமுறப்பா சுவை
இன்றும் பயணக்கிறது
ஓர் காதலாய்....
--------------------------------------
-J.K.பாலாஜி-