மேகம் மூடிய நிலவு நீ

முழுக்க ஆடை போர்த்தி
முக்காடிட்டு -கார்மேகம்
மூடி மறைத்த
முழு நிலவை போலவே
உலவுகிறாய் எப்பொழுதும்
உன் அழகு முழுதும்
காதல் மொழிந்த நான்
மட்டுமே ரசிக்க வேண்டும்
என்பதில் உறுதியாய்
இருக்கிறாய் போல !!!!

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (15-Mar-17, 11:42 am)
பார்வை : 332

மேலே