மழைத்துளி
பூட்டின் துவாரத்தில்
ஒரு சுகப்பிரசவம்
துளிர்விட்ட செடி
துளிர்விட்ட செடி
கண்டு கொள்ளவில்லை
இரும்பில் ஈரம்
கடினமான பூட்டு
துருப்பிடித்த துவாரத்தில் நுழைந்தது
மழைத்துளி
மழைத்துளி
சிறு துவாரத்தை நிரப்பியது
வளரும் செடி
தாகமெடுத்த பறவை
நீண்ட அலகை நுழைக்கிறது
மேகத்தில்
வானத்தில் விழுந்த கல்
பரவுகிறது
நீரலை
- கி.கவியரசன்