தேன் தேன் தேன்

கன்னியவள் கட்டழகோ மலைத்தேன்
காணுற்ற கணமேயான் மலைத்தேன்
இதயத்தை இகவாக்கி நிரவித்தேன்
இன்பத்தின் இசைவாகி நிகழ்வித்தேன்

நாண்மதி நங்கையிவள் கொம்புத்தேன்
நாணமுற்ற நளினமிவள் வம்புத்தேன்
நவநிதியாய் நெஞ்சத்தில் நேசித்தேன்
நவகிரகமாய் வலம்வந்து பூசித்தேன்

அழைத்தேன் அணைத்தேன் ருசித்தேன்
கற்பனைக்குள் களவாடி சுவைத்தேன்
கவியாகி கணையாகி நெகிழ்ந்தேன்
கனவுக்குள் களிநாடி அகழ்ந்தேன்

ஊற்றாகி உள்ளத்தை உரைத்தேன்
வேற்றாகி விரைந்தாள் தொடர்ந்தேன்
ஈற்றாக இயைந்திட விழைந்தேன்
மாற்றாகி மறுத்தாள் உறைந்தேன்

உணர்வற்ற ஊனாகி உலைந்தேன்
உயிர் உருகி திரைந்து தொலைந்தேன்
கரைந்து கனிந்தாள் உகந்தேன்
காலமெல்லாம் கன்னிமடி கமழ்ந்தேன்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (16-Mar-17, 9:13 pm)
பார்வை : 111

மேலே