தமிழே
சிறந்தே பிறந்த என் தமிழே!
நாளும் மிளிரும் உன் அழகே!
கலைபல பயிலும் நன்மகளே!
என்றும் வளரும் உன் புகழே!
கருவிலே கலந்த என் உறவே!
கவிஞர் விரும்பும் காவியமே!
அறிஞர் போற்றிடும் பேரகராதியே!
அழிக்க முடியாத ஓவியமே!
அறிய இயலாத அற்புதமே!
தமிழர் வாழ்வின் இலக்கணமே!
தரணியில் உயர்ந்த ரத்தினமே!
தகுதியால் சரணடைந்தேன் இக்கணமே!