வண்ண வண்ண வெட்கங்கள்

பார்க்கும் உன்னை ரசிக்கும்
உன் கண்ணாடி
பிம்பம்!

குளியலறையில்
அழுத முகத்தோடு
நீ நேற்று வைத்த பொட்டு!

புதிய செருப்பை பார்த்து
சொல்லப்படாமல்
என் காதல்!

இன்றைய பயணம்
பேருந்திற்கு இனிமையானது
சன்னலோரம் நீ!

உன்னை படித்துக் கொண்டது
உன் கையிலிருந்த
கவிதை புத்தகம்!

வண்ண வண்ணமாய்
வெட்கங்கள் புடவைக்கு
உன்னை கட்டியதால்!

உன் உறக்கம் பார்க்க
விழித்திருக்கிறது
என் இரவு!

- கோபி சேகுவேரா

எழுதியவர் : கோபி சேகுவேரா (17-Mar-17, 11:21 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
பார்வை : 130

மேலே