உன் நினைவுகளோடு என் வாழ்க்கை 555

உன் நினைவுகளோடு என் வாழ்க்கை 555

என்னுயிரே...

சிவப்பு தாவணியும் மஞ்சள்
பாவாடையும் எனக்கு பிடித்தது போல...

உன் நேர் வகிடும் ரெட்டை ஜடையும்
எனக்கு பிடித்ததுபோல...

பற்கள் தெரிந்தும்
ஆரவாரமின்றி உன் புன்னகை...

எனக்கு பிடித்ததுபோல...

எனக்கு மட்டும் கேட்டுவிடும்
உன் வளவயல் ஓசைகள்...

உன் கூந்தலில் சூடும் பூச்சரமும்
எனக்கு பிடித்ததுபோல...

என்னோடு நீ உறவாடிய
ஒவ்வொரு நாளும்...

எனக்கு பிடித்ததுபோலவே
நீ இருந்தாய்...

ஒவ்வொருநாளும்
உன் அழகை...

வாய்விட்டு உன்னிடம்
சொல்லி ரசித்தேன்...

ஒருநாளும் நீ என்னை
சொல்லவில்லையடி...

உனக்கு பிடித்தவனாய் நான்
இருக்கிறேனா என்று...

வாய்விட்டு நீ
சொல்லி இருந்தால்...

உனக்கு பிடித்ததுபோல்
நானும் இருந்திருப்பேன்...

உன் வாழ்வில் இறுதிவரை
உன்னோடு உறவாடிட...

உனக்கு பிடித்தவனாய் நீ
தேர்ந்தெடுத்துவிட்டாய்...

இன்றுவரை நான் உனக்கு
பிடித்தவனா இல்லை பிடிக்காதவனா...

தெரியாமலே வாழ்கிறேனடி
உன் நினைவுகளோடு நான்.....


Close (X)

8 (4)
  

மேலே