தடுப்பணையை தடுத்திடுவோம்

தடுப்பணைகள் தடுத்திடுவோம்

தண்ணிக்காக தவிப்பதுவே
தமிழினத்தின் தலைவிதியா ?
தடுப்பணைகள் கட்டுவது
தமிழனுக்கு எதிர்வினையே !
தடுத்திடவோ நாம் முயன்றால்
தடியடிதான் புதுவிதியா ?
தடியடிதான் கொடுத்துவிட்டால்
தண்ணீரோ வந்திடுமோ ?

வாழவெச்ச முகமெல்லாம்
வாடிநிக்குதே வாழ்விழந்து நிக்குதே
விவசாயி நிலமெல்லாம் விளைநிலமாய் அல்லாமல்
விலைநிலமாய் மாறிப்போனதே

பாவம் செஞ்ச பாவிகளால்
படியளந்த பரம்பரைகள்
பட்டினியில் செத்துபோகுதே
உலகிற்கே படியலந்தோமே! இன்று
உழுவதற்க்கோ நீரின்றி
உயிர் இழந்தோமே!

எழுதியவர் : சே.மகேந்திரன் (18-Mar-17, 9:45 pm)
சேர்த்தது : smahendhiran
பார்வை : 35

மேலே