இசைரசிக்க நெஞ்சம் போதும்

புரியாத ராகத்தில் பாடுகிறாள் பாடகி
புரியாமலே பாட்டினை ரசிக்கின் றேன்நான்
இசைக்கு ஏழுசுர இலக்கணம் வேண்டும்
இசைரசிக்க இதயம் இருந்தால் போதுமே !

யாப்பினில் இது நிலை மண்டில ஆசிரியப்பா !

புரியாத ராகத்தில் பாடும் கலைஞை
புரியாமல் பாட்டினை நான்ரசிக் கின்றேன்
இசைக்கு எழுசுரஇ லக்கணம் வேண்டும்
இசைரசிக்க நெஞ்சம்போ தும்

இது இன்னிசை வெண்பா

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Mar-17, 7:50 pm)
பார்வை : 51

மேலே