உயர்வுகள்
நேர் பட வாழ்ந்து,
திறம் பல பெற்று,
நலம் யாவும் வாய்த்தல்,
குலம் தலைக்கும் வழியன்றோ!
நயமெனவே பயனுறு செயல் பல செய்து,
நலமெல்லாம் நாளும் பெற்று,
ஓங்கு புகழ் தளர்வர பெறுதல் நலமன்றோ!
பெறுவது சுகம், கொடுப்பது மேல்,
தருவது குணம், மறப்பது தவறு,
நினைப்பது உயர்வு, நிம்மதி நாடு.
அன்பு என்பது ஆனந்தம்,
கருணை என்பது காருண்ணியம்,
பண்பு என்பது பாரம்பரியம்,
உறவு என்பது உன்னதம்.