இனியவளே

கொட்டும் மழையில்
இணைந்து நடக்க
யாரும் அறியாமல்
உன் கைவிரல் பிடிக்க
பிடித்த பாடலை
இரகசியமாய் முணுமுணுக்க
பார்வைக் கலப்பால்
தகவல் பரிமாற
கவிதைப் பூக்களை
உன்மேல் பொழிய
சுமையையும் சுகமாய்
உன்னோடு சுமக்க
காத்திருக்கிறேன் இனியவளே!

எழுதியவர் : லட்சுமி (18-Mar-17, 9:59 pm)
சேர்த்தது : Aruvi
Tanglish : iniyavalae
பார்வை : 284

மேலே