இரயில் பயணம்
இரயிலோடும் தடம் வழியே
என் இரவோடிப் போகிறது!
உறங்காமல் விழித்திருக்க,
என் மனமெங்கோ மேய்கிறது.
அடங்காத அலைபோலே..
அழகான நினைவலைகள்!
நிலவொளியில் காற்றோடு,
என் மனம் வருடிப் போகிறது
காலங்கள் மாறுகையில்,
காட்சிகளும் மாறினவே..!
மாறாத நினைவுகள் என்..
நெஞ்சோடு பதிந்தனவே.
அமைதியான இரவினிலே
அசைபோட்டு பாத்திருந்தேன்,
தெகுட்டாத இன்பம் தரும்
அத்தனையும் பொக்கிஷங்கள்.
நிலையற்ற மனிதனுக்கு
நிரந்தரமாய் ஏதுமில்லை!
நினைவுகளின் மீது மட்டும்,
கொஞ்சம் நீடித்த நாட்டமுண்டு.
தனிமையிலே புன்னகைக்கும்
தருணங்கள் வேண்டுமென்றே..
இனிதான நினைவுகளை
என் இதயத்தில் பூட்டிவைத்தேன்!!