கவியே பிரியாதிரு

வானிடிந்து புவிமூடினும்
கவியே எனை பிரியாதிரு
நெய்தல் வற்றி பாலைபிறப்பினும்
கவியே எனை பிரியாதிரு
திங்கள் சுட்டு ஆதவன்அழிந்தும்
கவியே எனை பிரியாதிரு
பாரியின்று பரிசில்லைஎனினும்
கவியே எனை பிரியாதிரு
பெண்டிர் ஆழம் முழுதும் புரிந்தும்
கவியே எனை பிரியாதிரு
அதியமான் நட்பு அறுந்துபோயினும்
கவியே எனை பிரியாதிரு
வர்ணகிளி சாயம் வெளுத்துபோயினும்
கவியே எனை பிரியாதிரு
ஓருயிர் ஆனவள் எனைமறந்து போயினும்
கவியே எனை பிரியாதிரு
தனிமை அதுவும் நெருங்க மறுப்பினும்
கவியே எனை பிரியாதிரு
மரிக்க போகும் முன்நொடி பொழுதும்
கவியே எனை பிரியாதிரு
யான் மரித்து முளைத்த புல்லின்மீதும்
கவியே நீ பனியாய் இரு...


$வினோ...

எழுதியவர் : வினோ.... (19-Mar-17, 9:28 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
பார்வை : 77

மேலே