சிந்தனை நான் மறந்தேன்
சிந்தனை நந்தவனத் தில்செம் மலர்ப்பூக்கள்
வந்து நிலவும் இளம்தென்ற லும்வாழ்த்த
அந்தி அழகில் அவள்பூ வெனவந்தாள்
சிந்தனை நான்மறந் தேன் !,
ஒருவிகற்ப இன்னிசை வெண்பா .
சிந்தனை நந்தவனத் தில்செம் மலர்ப்பூக்கள்
வந்து நிலவுதென் றல்வாழ்த்த - வந்தனள்
அந்தி அழகில் அவள்பூவாய் பொற்சிலையாய்
சிந்தனை நான்மறந் தேன் !
ஒரு விகற்ப நேரிசை வெண்பா .
நேரிசை வெண்பாவாக மாற்றி வடிவமைக்கும் போது கற்பனை விரிகிறது .
ஏற்ற சொற்களால் மாற்றிடும் போது கவிதையின் அழகு மெருகு கூடுகிறது .
----கவின் சாரலன்