இன்றைய பெண்களின் குமுறல்

அப்பான்னு நினைச்சேன்...!
அசிங்கமாய் தொட்டான்.....!

சகோதரன்னு பழகினேன்....!
சங்கடமாய் தொட்டான்........!

மாமான்னு பேசினேன்......!
மட்டமாய் நடந்தான்.....!

உறவுகள் அனைத்தும்
உறவாடவே
அழைக்கின்றன.....!

பாதுகாப்பை தேடி
பள்ளிக்கு சென்றேன்...!

ஆசிரியனும்
அரவணைத்து
மறுக்காதே மதிப்பெண்
குறையும் என்றான்....!

நட்புக்கரமொன்று நண்பனாய்
தலைகோதி தூங்கென்றான்....!

மரத்த மனம்
மருண்டு சுருண்டு
தூங்கையில் கைப்பேசியில்
படமெடுத்தான்
அவனும் ஆண்தானே...!

கதறி அழுது கடவுளிடம்
சென்றேன்
ஆறுதலாய்
தொட்டு தடவி
ஆண்டவன்
துணையென்றான்
பூசாரியான்....!

அலறி ஓடுகிறேன்
எங்கே போவேன்?

சமத்துவம் வந்ததெனெ
சத்தமாய் கூறுகின்றனர்
பெண்ணை பெண்ணாக
பார்க்காமல் மனிதராய்
பார்ப்பது எக்காலம்?

பாவிகளின் பாலியல்
வன்முறை என்று ஓயுமோ?

என் பெண் பிள்ளை
இரண்டு மாத சிசு
என்றும் பாராமல்
பாலியல் வன் கொடுமையில்
ஈடுபடும் மிருகங்களின்
உயிர் நாடியை
அறுத்து விட்டால்
அடங்கி விடும்
அற்பர்களின்
அந்தரங்க மோகம் !!!

எழுதியவர் : கவிழகி செல்வி (20-Mar-17, 4:59 pm)
பார்வை : 107

மேலே