நான் கவிஞன் தானா
நான் கவிஞன் தானா...!?
=====================
அரை ஆண்டாகவே
என் சிந்தனைக்கு
எட்டிய வரிகளை
உங்கள் முன்
சமர்ப்பித்தேன்
இதில் நான்
கவி எழுத
தகுதி உடையவனா...?
நான் எழுதுவது
கவி தானா...?
திடீர் என்று
ஏன் எழுத தொடங்கினேன்..?
எழுதுவதெல்லாம்
கவி என சொல்கிறார்களே
அது கவி தானா..?
இன்றும் எனக்குள்
எழும் கேள்விக்கு
விடையில்லாமலே நொடி
முழுதும் விடைபெறுகிறேன்...!
மொழி ஆளுமை கொண்ட
பெரியோர்களும் கவிஞர்களும்
சற்றே விளக்கினால்
தெரிந்து கொள்வேன்
கவி எழுதுகிறேனா...!?
கவி மாதிரி எழுதுகிறேனா...!?
நான் எழுத ஆரம்பித்து
7 வது மாதம் முடியும்
தருவாயில் என்னால்
வினவப்பட்ட வினா....!?
-J.K.பாலாஜி-

