அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
மதியெனமுகம் சிவந்திடும்படி நானே
------ மறுமொழிதர மறுத்திடவிலை தானே
பதியெனயுனை நினைவினில்கொளு வேனே
------ பழகிடும்வரைப் பயமினியிலை மானே
கதியெனயுனை கனவிலும்மனம் தேனே
------ கவிதைகள்பல கருத்தினில்சுகந் தானே
விதிவழிவர விரைந்திடும்படி நீயே
----- விழிவழிமொழி சிறந்திடுமெனப் பேசாய் !
சரஸ்வதி பாஸ்கரன்

