தேவதை சாயல்
நெற்றியில் விழுந்த
ஒற்றை கீற்றை
விரல்நுனி கொண்டு விலக்கினாள்!
விரலோடு சேர்ந்து
சரிந்தேன் நான்!
தெற்று பல் தெரிய
சத்தமாய் அவள் சிரித்தாள்!
குப்பென்று வியர்த்து
கிறுகிறுத்து போனேன் நான்!
நேர்த்தியாய் சடை பின்னி
மல்லி சரம் கொண்டு
அலங்கரித்தாள் அவள்!
தேவதை கூந்தலில்
விழுந்தேன் நான்!
முதல் முறையாய்
மென்பாதம் பதிய
கொலுசொலி சிலிர்க்க
நடந்தாள் அவள்!
இதயம் படபடக்க
இமை மூடி
மனம் தொலைத்தேன் நான்!