உன்னவள்

உன் காந்த விழிப் பார்வையை கண்டு;
இமைக்க மறந்தன என் இமைகள்;
உன் தோள்களின் வலிமையை கண்டு
வெட்கத்தில் சிவந்தது என் தோலின் நிறம்.
உன் நடை கம்பீரத்தைக் கண்டு;
நாணியது என் நளினம்.
உன் உடை மிடுக்கை கண்டு;
இடைமறித்தது என் நடை.
உன் மனப் பொலிவை கண்டு;
தோற்றது என் தோற்றப் பொலிவு .
இந்த உணர்வுகள் நான் 'உனக்காக பிறந்தவள் '
என்ற காரணத்தினால் ஏற்பட்ட காரணிகளோ?????

எழுதியவர் : உமா (21-Mar-17, 8:20 pm)
Tanglish : unnaval
பார்வை : 89

மேலே