என்னவளின் கைபேசி

என்னவள் கைக்குள்ளே
நிரந்தரமாய் நீ தங்கிட்டாய்
என்னவள் அருகினில்
நித்தமும் நீ துயில் கொண்டாய்
என்னவள் முழு அழகை
நித்தமும் நீ படம்பிடித்தாய்
என்னவள் முத்தத்தில்
நீயுமொரு பங்கெடுத்தாய்
நான் விடுக்கும் அழைப்பினை
நன்றியுடன் கொடுத்திடு
கொடுக்காது தவறினால் நீயும்
தவறிடுவாய் நினைவில் கொள்
இப்படிக்கு பொறாமையுடன்
உந்தன் தலைவியின் காதலன்

எழுதியவர் : (21-Mar-17, 9:59 pm)
Tanglish : ennavalin kaipesi
பார்வை : 131

மேலே