உனக்காகவே நான்
விடியல் தொடங்கியும்
உறக்கத்தில் உறைந்து போனவன்
இரவு முழுவதும்
இமைகளை திறந்து
கனவு காண்கிறேன்
பக்கம் பக்கமாய் கவிதை கிறுக்கி
மொழியினை முழுவதும்
அறிந்தும்
உன் அருகில் ஊமையாகிறேன்
காத்திருக்கும் நேரங்களில்
முடமாகி போகும் நிமிடங்களை
திட்டி தீர்க்கும் கோபத்தில்
உனை காணும் நொடியினில்
விரைந்து ஓடும் காலத்தின்
காலில் விழவும்
துணிகிறேன்
மாற்றம் ஒன்றுதான்
மாற்றமில்லாததாம்
யார் சொன்னது?
உனை கண்ட நொடியினில்
முதன்முறையாய் மாறியவன்
இப்பொழும் மாறாமல் இருக்கிறேன்
அதே ஏக்கத்தோடு
உன் சாலை ஓரங்களில்