அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம்
அந்த சாலை ஓரம்
ஒரு மாலை நேரம்
மங்கும் இரவின் ஒளியினிலே
நீயும் நானும் இரு கைகள் கோர்த்து
பெண்ணே நடந்து போகையிலே
என்னைத் தள்ளி விட்டு நீ நடந்தால்
என் நெஞ்சில் இனம் புரியாத பயம்
எந்தன் கைகளைப் பிடித்து கொண்டால்
அடி என்னுள் தோன்றும் கோடி சுகம்
உந்தன் மடியினிலே
ஒரு நூறு ஆண்டு வாழ வேண்டுமடி
உந்தன் மிதி அடியாய்
இனி ஏழு ஜென்மம் தோன்ற வேண்டுமடி
அழகே அழகே நீ அசைந்தால் அசையும் உலகே
அமுதே அமுதே உந்தன் இதழ்கள் தான் என் உணவே
அழகே அழகே நீ அசைந்தால் அசையும் உலகே
அமுதே முத்தே உந்தன் இதழ்கள் தான் என் உணவே
தேய் பிறையாய் தேய் பிறையாய்
என்னைத் தேய்த்து போகாதே
நான் தேய்ந்து போனாலும்
என் காதல் பௌர்ணமி ஆகிடுமே
காதலிலே காதலிலே
தோல்விகள் கிடையாதே
நான் தோற்றே போனாலும்
எந்தன் காதல் தோற்காதே
உந்தன் மடியினிலே
ஒரு நூறு ஆண்டு வாழ வேண்டுமடி
உந்தன் மிதி அடியாய்
இனி ஏழு ஜென்மம் தோன்ற வேண்டுமடி
அழகே அழகே ...
பொன் மழை சாரலில் மல்லிகை பூவென
மின்னிடும் தாரகை நீவரவே
கைகளை கூப்பியே முத்தங்கள் சேர்த்திட
கன்னங்கள் பார்த்து நான் காத்திருப்பேன்