ஓம் மேல ஒரு கண்ணு

ஓம் மேல ஒரு கண்ணு
நீ தான் என் மொறப் பொண்ணு
ஒண்ணோட இவ ஒண்ணு
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு
இருக்குறேன் ஒன்னால பறக்குறேன் தன்னால
கெறங்குறேன் நொறுங்குறேன்
பாரு நான் உன் மாப்பிள்ள

ஓம் மேல ஒரு கண்ணு
நான் தான் உன் மொறப் பொண்ணு
ஒண்ணோட இவ ஒண்ணு
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு
இருக்குறேன் ஒன்னால பறக்குறேன் தன்னால
கெறங்குறேன் நொறுங்குறேன்
நீ தான் என் மாப்பிள்ள

கொஞ்சுனா மிஞ்சுற மிஞ்சுன கொஞ்சுற
ஏண்டி இந்த நாடகம்

கெஞ்சுனா அஞ்சுறேன் அஞ்சுனா கெஞ்சுறேன்
நாளும் அங்கு ஞாபகம்

சொல்லாம கொள்ளாம மூடி வெச்சு
என்ன அங்கேயும் இங்கேயும் அலைய விட்ட

அள்ளாம கிள்ளாம நோக வெச்சு
என்ன முன்னாலும் பின்னாலும் மொனக விட்ட

ஒத்துகிட்டா மாமன் தான்
கட்டிக்க வாறன் வாறன்

ஓம் மேல ஒரு கண்ணு
நான் தான் உன் மொறப் பொண்ணு
ஒண்ணோட இவ ஒண்ணு
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு

வெட்டுனா ஓட்டுற ஓட்டுனா வெட்டுற
லூசு பையன் மாதிரி

கட்டுனா தட்டுற தட்டுன கட்டுற
வா வா கொல்லுதே வெறி

சுத்தாம சுத்தாம நீ இருந்தா
உன்ன திட்டாம கொட்டாம ஏத்துக்குவேன்

விக்காம கிக்கெர நீ கொடுத்தா
மிச்சம் வெக்காம குத்தாட்டம் போட்டுக்குவேன்

போட்டு வெச்ச பொண்ணு நான்
தொட்டுக்க தாரேன் தாரேன்

ஓம் மேல ஒரு கண்ணு
நீ தான் என் மொறப் பொண்ணு

ஒண்ணோட இவ ஒண்ணு
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு

இருக்குறேன் ஒன்னால

பறக்குறேன் தன்னால

கெறங்குறேன்

நொறுங்குறேன்
நீ தான் என் மாப்பிள்ள

எழுதியவர் : யுகபாரதி (22-Mar-17, 10:42 am)
சேர்த்தது : கிரிஜா
Tanglish : OM mela oru kannu
பார்வை : 120

மேலே