கொஞ்சி பேசும் விழிகள்
ஓர் வழியில் இருவிழிகள்
காதல்
இரு மனங்கள் மோதும்
மின்னல்
ஒரு கணமோ பறிதவிக்கும்
பார்வை ஏனோ..
பறவைகளாக பறக்கும் மனதில்
காதல்கூடு கட்டடிய மனங்கள்
சிறகுகள் முளைத்த வண்ணங்களாய்
உறவுகளின் உரிமைக்காக
உன்னத அன்பு கொண்டு...
தீவிர காதல் தீராத வினையாக
அனுமதியில்லாமல் உள்ளம்
இடம் மாறியது
இருந்தும் இதயம் ஒன்றானது
அவள் வார்த்தையால் என் அன்பு
மெய்யானது....
காதல் உன்மேல் எனோ
இது இறைவன் தீர்ப்பு தனோ
உள்ளம் உன்னை தொடரும்
நெஞ்சம் அள்ளும் தணோ..
தஞ்சம் கேட்கும் மடியில்
கொஞ்சி பேசும் விழிகள்
உன் விழி எனும் வழியில்
உறவுகள் மலர
என் உண்மை காதல் அலையாக
வீசும் உன்மேல்....