என் கவிதைக் காதலி

சிலவேளை
நெஞ்சைப் பிழிகிறாய்
எண்ணம் சிதைக்கிறாய்
கலராய் கனவாய் வந்து ஜாலம் புரிகிறாய்
செவ்விதழ் பருக வாவென அழைத்து மோவாய் திறக்கிறாய்
அழையா வேளை உள்ளிருந்து கண்ணடிக்கிறாய்
அழைத்தால் முடியாதென சண்டித்தனம் புரிகிறாய்
வந்தால் கனியாய் ருசிக்கிறாய்
மலராய் மணக்கிறாய்
வராத வேளை பிரசவ வேதனை தந்து
என்னைக் கொள்கிறாய்

என் கவி மகளே !
மனக்கவலை போக்கும் தாயும் நீயடி
மகிழ்ச்சியாய் கொஞ்சும் சேயும் நீயடி
அணைத்தால் சுகம் தரும் காதலி நீயடி
தளர்ந்தால் உயிர்ப்பூட்டும் ராகமும் நீயடி
என் வாழ்வும் நீயடி மூச்சும் நீயடி
தலை சாய்க்க எனக்கு நிதமும் வேண்டும் உனது மடி

எழுதியவர் : alaali (22-Mar-17, 1:22 pm)
பார்வை : 95

மேலே