ஜீடி நாயுடு பிறந்த தின கவிதாஞ்சலி

தமிழகத்தின் நிதியமென பட்டம் சூட்டி
தந்தை பெரியாரும் புகழ்ந்தே மகிழ்ந்தார்!
தமிழகத்தின் இங்கர்சால் என்றே சொல்லும்
தமிழருவி பேச்சாலே நெஞ்சை யள்ளும்
தமிழகத்து தலைமகனாம் அண்ணாவும் தான்
தனித்தமிழில் “மதிப்புடை கருவூல” மென்றார்!
தமிழ்நாட்டு எடிசனென பேர் சொல்லும்
தகைசால் ஜீ.டி. நாயுடுவை போற்று வோமே!

எண்ணற்ற சாதனைகள் நிகழ்த்த வேண்டி
இயந்திரங்கள் பலவற்றை கண்ட றிந்தே
எண்ணற்ற பலன்களை பெறு வதற்கே
ஈடில்லா உழைப்பையே அளித்து வாழ்ந்தார்
மின்பொருட்கள் பலவற்றை செய்து காட்டி
மேதினியில் புகழ்நிலைக்க வாழ்ந்தவர் தான்
கண்போன்ற விவசாய தொழிலில் கூட
கருத்துடனே கவனத்தை செலுத்த லானார்!

அன்றேதான் பயணச்சீட்டை அச்ச டிக்க
அரிதான இயந்திரத்தை பயன் படுத்தி
நன்றாகவே நிர்வாகத்தில் நாட்டம் காட்டி
நெடுந்நூர பேருந்துகள் ஓட செய்தார்!
மின்னதிர்வு கண்டறியும் பொறிகள் கூட
மிகவிரைவாய் செய்துதான் புகழ் பெற்றார்!
தன்னலமே பெரிதென்று கொண்டி டாமல்
தாமாக வரிகளையே செலுத்த லானார்!

பளபளக்கும் முகப்பொலிவு மின்னுதற் காய்
பிளேடுகளை தாமேதான் படைத்து காட்டி
பல-பரிசும் பேரும்தான் கிடைத்த போழ்தும்
பணத்திற்காய் விலைபோக துணிந்தா ரில்லை!
பல-வகையில் பருத்திகளும் நன்றாய் வளர
பல்வகையில் ஆராய்ச்சிகள் செய்து தானே
நிலத்திலேயும் சாதனைகள் நிகழ்த்தி காட்டி
“நாயுடு காட்டன்“ என்றே மின்ன லானார்!

பழச்சாறு பிழிந்தெடுக்க ஓர் கருவி!
பளபளக்கும் முகச்சவரம் செய்ய பிளேடு!
உழுவதற்கும் பல்வகையில் கருவி களை
ஓயாமல் தந்தேதான உதவி நின்றார்!
பழகுவதில் எளிமையின் தோற்றம் தந்தே
பாகுபாடு பேதங்களை களைந்தவர் தான்!
தொழுதுதான் மிக்க-வரி செலுத்த வேண்டின்
தேவையில்லை கண்டுபிடிப்பு என துணிந்தார்!

தொழிற்கல்வி கைமேலே பல னென்றே
தொழில்நுட்ப கல்லூரியை துவக்கி தானே
அழைத்தழைத்து மாணவரை சேர்க்க லானார்
அதிக-வரி செலுத்திதான் வாழ்ந்த போதும்
அவப்பெயர்தான் மிஞ்சியதே அந்தோ பாவம்!
விழலுக்குத்தான் நீரிறைத்த கதை போல
வீணாய்தான் கண்டுபிடிப்புகள் போன தன்றோ!
அழகுதமிழ் நாட்டினிலே அவரின் ஆற்றல்
அவலமாகி போனதில் தலைகுனிவு தானே!

எழுதியவர் : கவிஞர் கே. அசோகன் (23-Mar-17, 10:00 pm)
பார்வை : 88

மேலே