இதயத்திற்குள் தீ வைத்து விட்டாய்

இதயத்திற்குள் தீ வைத்து விட்டாய் :

உயிருக்குள் உனை வைத்து என்
வேர்வரை நாடிகளில் நரம்புகளில்
உதிரத்தோடு உன் நினைவையும் சேர்த்து
பாய்ச்சி நான் வாழ இதுவரை உதவியது உன் காதல் மட்டும் தான்.

உண்மையில் காதலின் தலைவிதி இன்று நம் வாழ்விலும் சுழன்றாடக் காண்கிறேன்..
புரிதல் அற்றப் பிரிதல் ஒரு வேதனை என்றால்,
புரிதலிலும் இந்தப் பிரிதல் அதைவிட வேதனை.

விதியின் நதியில் ஓடமாகிக் களித்து விளையாடித் திளைத்திருந்த வேளை,
காலத்தின் வெள்ளமாக வந்தச் சுழலில் நாம்
சுழன்றுச் சுழன்று ஆற்றோடுப் போனோமே எதனால்.

ஒதுங்கி நின்ற நிகழ்காலக் கரைகளில்
நாம் தரைத்தட்டி நின்ற படகாய்,
உடலெங்கும் குத்தூசி இன்றி வேதனையில் வழிந்த உதிரத்தோடு என் ஆன்மாவும் போனதே.

நடைப்பிணமாய் அசைவற்று நான் சோர்ந்து நடக்கையில்
உன் ஒற்றைப் பார்வை எனைத் தாங்கி பிடித்ததேன்,
என் விரதம் உடைக்கும் உன் காதல் தீவிரம்
அதை அறியாமல் எனைத் தாங்கும் கரங்கள் ஏன்.

பற்றிப்பிடித்த விரல் நுனியில் குழந்தையின் இதம்
தீயில் இட்ட இரும்பாய் என் இதயம்
அதை எவ்வாறு உன் கரங்கள் தாங்கும்
இதயத்தில் தீ வைத்தவனும் நீ தான் என்ற உண்மையை ஒரு வேளை அறிந்திருப்பாயோ!!!

எழுதியவர் : தமிழ் ப்ரியா (24-Mar-17, 4:29 pm)
பார்வை : 134

மேலே