பாடல் வரிகள்
காதில் வேல் வீசும் கொலுசை நிறுத்து
சேதம் செய்கின்ற சிரிப்பை நிறுத்து
வாதம் செய்கின்ற வளையல் நிறுத்து
கண்கள் களவாடும் மின்னல் நிறுத்து
கதறி அழுகின்ற இடியை நிறுத்து
கத்தி எரிகின்ற மழையை நிறுத்து
அந்த இருவிழி தெரித்திடும் மின்னல்கள் வேண்டும்
இதழ்வழி பொழிந்திடும் மழை மட்டும் வேண்டும்
அவளுக்கு நான் மட்டும் தெரிந்திட வேண்டும்
அவள் முகம் நான் மட்டும் அறிந்திட வேண்டும்
"சிந்திவிழும் முதல் மழை
வந்துவிழும் முதல் அலை
எந்திரிக்கும் முதல் மலர்
சுந்தரிக்கு சொந்தம் ஆகவே.....!"
காதல் வந்ததே.. காதல் வந்ததே.. காதல் வந்ததே....