காலம்
நேரம் என்னிடம் இல்லை!
காரணம் அறியவில்லை .....
நிமிடங்கள் ஓடுகிறது!
நொடிகள் மரணிக்கிறது .....
அடுத்த நாள் உதயத்தை பார்க்க நான் இங்கு இல்லை !!!
!!!!!
என்னிடம் எதுவும் இல்லை !
அதை பற்றி கவலை இல்லை .....
இந்நொடி இருக்கிறது !
இந்த நொடி எனக்காக நொடிக்கிறது.....
இந்த உதயம் எனக்கான விடியல் !!!
!!!!!
நாளை என்பது நிரந்தரம் கிடையாது !
நாளை இருக்கிறதா இல்லையா தேவையில்லை .....
இன்றை வாழ்ந்துவிட்டால் !
இன்றைய இன்று தான் .....
நேற்றைய நாளை !
நீ நாளை நாளை என்று நாளை கடத்தாதே .....
நாளை என்பதே இந்த நொடியின் பிரதிபலிப்பு தான் !!!
காலமும் நேரமும் எவர் ஒருவருக்கும் மகிழுந்துவில் காத்து நிற்காது
அது மாட்டும் ஓடிக்கொண்டே இருக்கும்
நேற்றிலேயே இருக்காதே
நாளை என்ற கற்பனையில் மிதக்காதே
இன்றில் நின்று நேரத்தை போல நேரம் தவறாமல் இரு
எறும்பை போல அத்தியாவசியத்தை நாளைக்காக சேமித்துக்கொள்ளுங்கள்
அத்தியாவசியம்
அனாவசியம் அல்ல
நினைவில் நிறுத்துங்கள்
இயற்கை தான் அத்தியாவசியம்
மனிதனுக்கு எது முக்கியமோ அதையே அழிக்கிறான்
வாழ்வதற்கு தேவையான பணத்தை சேமித்துக்கொள்ளுங்கள்
உணவு உடை இருப்பிடம் கல்வி மருத்துவம் வாழ என்ற உங்களுடைய அடிப்படை தேவைகளுக்கு
உழைத்து சேமியுங்கள்
அளவுக்கதிகமானால் எதுவும் வீண் தான்
பணத்தை உண்ண முடியாது
உடன் எடுத்துச் செல்லவும் முடியாது
ஊழல் என்பது அனாவசியம்
பிறரின் தேவை உனது ஆடம்பரம் ஆன ஊழல் & அரசியல்
எமதர்மனும் நேரமும் நேரம் தவறாதவர்கள்
எதற்காகவும் யாருக்காகவும்
தன் கடமையில் இருந்து தவறாதவர்கள்
அப்படி வாழ்வதே சிறப்பு
வாழ்க்கை உண்மையாக வாழ்வதற்கே!!!
என் காலம் சரியில்லை என்று காலத்தின் மீது பழி போடாதீர்கள்
காலாத்தை மாற்றாமல் ஏமாற்றாமல் உண்மையாக உழைத்தால்
காலம் எல்லோருக்கும் வசந்த காலமே .....!!!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
