ஆராய்ச்சி

என் தலையது
கவிழ்ந்தது

மது தந்த
மயக்கத்தால்,

என் குடும்பமது
தலைகவிழ்ந்தது

என்னால் ஏற்பட்ட
அவமானத்தால்,

அது தெரியவில்லை
எனக்கு

புதிதாக ஆராய்ச்சி
செய்கிறேன்!

தனக்குள் மதுவை
நிரப்பிக் கொண்ட

குப்பியும்,குவலையும்
மட்டும்,

தலைகவிழாது

தலை நிமிர்ந்தே
நிற்கின்றதே

அது எவ்வாறு?
என்றே,

தலைகவிழ்ந்த படி..,
#sof_sekar

எழுதியவர் : #Sof #sekar (27-Mar-17, 11:10 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : aaraaychi
பார்வை : 342

மேலே