பந்தயம்

அடுத்தவன் ஆயிரம் செய்தாலும் உங்க வேலையை மட்டும் பாருங்க அதான் நல்லது
படித்ததில் ரசித்தது,நீங்களும் படிச்சிப்பாருங்க :


வங்கிக்கு புதிதாக வந்த மேனஜர் வங்கியின் கணக்குகளை சரி பார்த்துக்கண்டிருந்தார்.
அதில் ஒரு அக்கவுண்டில் மட்டும் தெனமும் 1000 ரூபாய்போடப்பட்டே வந்தது. அதுவும் ஒருநாள்கூட தடையில்லாமல் அந்த கணக்கில் போடப்பட்டு வந்தது. ஞாயிறு போன்ற விடுமுறை தினங்கள் வந்தால் அன்றைக்கும் சேர்த்து மறுநாள் சேர்க்கப்பட்டு வந்ததை கண்டு அதிசயித்தார்.

கேசியரை கூப்பிட்டு "யாருய்யா அந்த ஆள் "என கேட்டார்.

"தெரியல சார், தினமும் காலையில பாத்து மணிக்கு வருவார். பணத்தை போட்டுவிட்டு போயிட்டே இருப்பார். ஆள் கொஞ்சம் சிடுமூஞ்சி போல இருப்பார்,அதனால நாங்க யாரும் பேசறதில்ல சார்" என்றார்


மேனேஜருக்கு இப்படி ஒரு கேரக்டரை சந்திச்சே ஆக வேண்டும் என்ற ஆவலாகிவிட்டது.

அடுத்த நாள் காலையிலேயே வந்து காத்திருந்து அந்த நபர் வந்தவுடன் பக்கத்தில் போய் பேச்சி கொடுத்தார்.
அவரோ கண்டுகொள்ளாமல் போய்விட்டார்.

அவர் புறக்கணித்தாலும் அவரால் எப்படி தினமும் 1000 ரூபாய் போடமுடியுதுன்னு கண்டுபிடிக்கும் ஆர்வம் அதிகரித்ததால்,அவர் வரும் நேரங்களில் தவறாமல் நின்று அவரை பார்ப்பதும் புன்னகை பூப்பதும் சிரிப்பதுமாக இருந்துவந்தார்.

ஒருநாள் மேனஜர் வரும் வழியில் அந்த நபர் வண்டி பழுதாகி வழியில் நிற்கவே மேனேஜரும் லிப்ட் கொடுத்து அழைத்து வரும் வழியில் பேச தொடங்கினார் ,"சார் நாமதான் நண்பர்களாகிவிட்டோம்ல இப்பவாவது சொல்லுங்க என்ன தொழில் செய்யறீங்க ?"என

"சார், நான் தொழிலோ, வேலையோ செய்யல ஆனா தினமும் பந்தயம் கட்டி எப்படியும் ஜெயித்துவிடுவேன். அந்த பணம்தான் சார்"

மேனேஜருக்கு நம்பமுடியவில்லை,அது எப்படி தினமும் ஜெயிக்கமுடியும்,என ஒரு மாதிரியாய் பார்க்க "அதுக்குதான் நான் யாரிடமும் சொல்வதில்லை" என்றார்.

அப்படியும் சந்தேக்கமாய் பார்த்த மேனேஜரிடம்,"சரி சார், நாம ரெண்டு பேருமே ஒரு பந்தயம் போடுவோம்,நீங்க ரெடியா" என்றதும்

" சரியா, நான் ரெடி, பந்தயம் என்ன?' என்றார்.
"சார்,நாளைக்கு காலையில 10 .15 க்கு உங்க இடுப்புக்கு கீழ (படக்ஸ்ல) உட்காருமிலத்துல பச்சைக்கலரா
மாறிடும் ,2000 ரூபா பந்தயம்" என்றார் .
"யோ என்னய்யா சொல்ற, நடக்கற கதையா சொல்லு " என்றார் .
"சார் பந்தயத்துக்கு வாரீங்களா இல்லையா அத மட்டும் சொல்லுங்க " என்றதும் ஒத்துக்கொண்டுவிட்டார்

"காலையில வருவேன் உங்க படக்க்ஸ் பச்சயா மாறி இருக்கும் 2000 ரூபாய எடுத்து வச்சிக்கிங்க" என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்

மேனஜருக்கோ ஒரே குழப்பம் இவ்வளவு தைரியமா பந்தயம் கட்டுறானே என்ற யோசனையில் பேங்க் போனதும் பாத்ரூம் போய் பேண்டை கழற்றி கண்ணாடியில் பார்த்து செக் பண்ணிக்கொண்டார்.அது வழக்கம் போலவே கன்னங்கரேல் என்று இருந்ததில் சற்று நிம்மதியோடு பணியினை தொடர அவரால் இருப்பு கொள்ளவில்லை அரை மணிக்கொரு தரம் செக் பண்ணியவாறு அன்றைய பொழுதை ஓட்டினார்.

இரவு முழுதும் தூங்காமல் விடிந்ததும் முதல் வேலையாகபோய் பார்த்து பழையபடி கறுப்பாகவே இருக்க சமாதானத்துடன் குளித்துவிட்டு அலுவலகம் கிளம்பினார்.

பஸ்சில் உட்க்கார்ந்து போனால் ஏதாவது செட்டப் செய்துவிடுவார்களோ என பைக்கிலும் போகாமல் நடந்ததே போய்சேர்ந்தார் 10 மணிக்கு போகவேண்டியவர் 9 மணிக்கே வந்துவிட்டு 10 நிமிடத்துக்கு ஒரு முறை பார்த்து பார்த்து உறுதி செய்துகொண்டார்.எப்படியும் அவனை தோற்கடித்து 2000 வாங்கிவிடவேண்டும் என்ற ஆவலில் காத்திருந்தார்

சொல்லி வைத்தார் போல் அவரும் சரியான நேரத்திற்கு மேனேஜரின் ரூம் உள்ளே வரவே,ஆர்வமிகுதியால் பேண்டை கழற்றி "இந்தா பார்த்துக்கோ அப்படியே கருப்பாதான் இருக்கு"என

உடனே அந்த நபர் கூட வந்த இன்னொருவரிடம் "என்னமோ பேங்க் ஆபீசர் பெரிய மனுஷன் அப்படியெல்லாம் செய்யமாட்டாருன்னு இந்த ஆளை நம்பி பந்தயம் கட்டினே, இப்ப புரியுதா ஏடு 3000 "என்றார்.
அப்போதுதான் கவனித்தார் பந்தயக்காரனுடன் வேறு ஒருவரும் வந்திருப்பதை.
அந்த நபரோ மேனேஜரை முறைத்தபடி 3000 பணத்தை நீட்டினார்.

பணத்தை வாங்கிய பந்தயக்காரன் 2000 த்தைமேனேஜரிடம் கொடுத்துவிட்டு நான் உங்கள்ட்ட தோத்துட்டேன் ஆனா இவர்ட்ட ஜெயிச்சுட்டேன் அதனால எனக்கு 1000 ரூ லாபம்தான் என கவுண்டரை நோக்கி பணம் கட்ட போய்விட்டார்.

அவனுடன் பந்தயத்தில் தோற்றவனிடம், "அவன்கிட்ட என்ன பந்தயம் கட்டினே?" என கேட்க

வந்தவன் கடுப்பாகி "போய்யா நீயெல்லாம் ஒரு பெரிய மனுசனா,என்ன பார்த்தவுடன் மேனஜர் பேண்ட கழட்டி பின்னால காமிப்பாருன்னான்,அப்படியெல்லாம் செய்யமாட்டீங்கனு உன்ன நம்பி பந்தயம் காட்டினேன் பாரு 2000 ரூபாய்க்காக இப்படி கேவலமா த்து..."

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (28-Mar-17, 1:07 pm)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
Tanglish : panthayam
பார்வை : 424

மேலே