தொலைவிலேயே நின்று

யாருடனோ எதையோ பேசிக்கொண்டிருந்தாள்…
எதை எதையோ சொல்லி சிரித்துக்கொண்டிருந்தாள்…
சற்றே தொலைவினில் அவள் காணாவகையில்
நான் பார்த்து மகிழ்ந்துகொண்டிருந்தேன்...
நான் பார்ப்பதை அறிந்திருந்தாளோ என்னவோ
மிக அழகாய் சிரித்துப் பேசிக்கொண்டிருதாள்…
நான் கொடுத்துவைக்காதவன் அந்த அழகை
அருகில் இருந்து கண்டு மகிழ…
தொலைவிலேயே நின்றுவிடுகிறேன் அவள்
விரும்புமாறு பார்வகள் கிடைத்துவிடும் வரை…
எப்படியும் தொலைவில்தான் நிற்பேனென்று
நினைக்கிறேன் இறுதிவரை...

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (28-Mar-17, 2:41 pm)
Tanglish : tholaivileye nindru
பார்வை : 178

மேலே