இந்திரலோகத்து பெண்

சுழலும் பூமி
நின்றுவிட்டது,
நகரும் மேகம்
உறைந்துவிட்டது,
காற்றின் வேகம்
குறைந்துவிட்டது,
ஓடைகள் எல்லாம்
சுருங்கிவிட்டது ,
தொலைவில் அவளை
பார்த்துவிட்டு...

குயிலின் கீதம்
நின்றுவிட்டது,
குழலில் நாதம்
குன்றிவிட்டது,
மழலை சொல்லும்
சற்றே மங்கிவிட்டது,
மங்கை அவள்
குரல் கேட்டு..

உதிக்க சூரியன்
மறுக்கிறதே
நிலவென
அவள் முகம்
கண்டதாலோ..

கடக்க நிலவும்
மறக்கிறதே
அவள் கருவிழி
கண்டு
மயங்கியதாலோ..

இயற்கை எல்லாம்
ஸ்தம்பிக்கிறதே
இவள்
இவ்வுலகத்து பெண்ணோ
இந்திரலோகத்து பெண்ணோ..

எழுதியவர் : முருகேசன் சத்தியமூர்த்தி (28-Mar-17, 2:32 pm)
பார்வை : 52

மேலே